சென்னையில் இறைச்சிக்காக பூனை கடத்தல்... ஷாக் ஆன இளைஞர் - பரபரப்பு பேட்டி!

Chennai Crime News Updates: சென்னையில் சாலைகளில் சுற்றித் தெரியும் நாய்கள் மற்றும் பூனைகளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் திருடி இறைச்சிக்காக விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : May 1, 2024, 09:58 AM IST
  • இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர் புகார் அளித்துள்ளார்.
  • போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு
  • இதனை உடனே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
சென்னையில் இறைச்சிக்காக பூனை கடத்தல்... ஷாக் ஆன இளைஞர் - பரபரப்பு பேட்டி! title=

Chennai Crime News Updates: கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை கீழ்ப்பாக்கம் குளக்கரை சாலையில் உள்ள பல்வேறு தெருக்களில் சுற்றித் திரியும் பூனைகளை மர்ம நபர்கள் பிடித்து சாக்கு மூட்டைகளில் எடுத்துச் செல்வதாகவும் பூனைகளைப் பிடித்து செல்லும் நபர்களை கையும் களவுமாக பிடித்து கொடுத்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஜோஸ்வா என்பவர் புகார் அளித்துள்ளார்.

சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்தவரும், விலங்குகள் நல ஆர்வலருமான ஜோஸ்வா என்பவர் எழும்பூரில் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர், சிலர் இரவுகளில் பூனைகளை திருடிச் சென்று இறைச்சிக்காக பயன்படுத்தி வருவதாகவும், நள்ளிரவில் பூனைகளை திருடிய நபர்களை பிடித்த போது ஒரு பூனைக்கு 100 ரூபாய் கொடுத்தால் பூனைகளை விட்டு விடுவோம் எனவும் திருடர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். மேலும், 'போலீஸ் எங்களை என்ன செய்யும்' என அந்த நபர் கூறியுள்ளார். 

சாலையோர கடைகளில் விற்பனையா...

மர்ம நபர்கள் பூனைகள் மற்றும் நாய்களை திருடுவதற்கு ஆயுதங்களைக் கொண்டு வருவதாகவும் நள்ளிரவு நேரங்களை பயன்படுத்தி சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் பூனை நாய்களை திருடி அதை ஒரே சாக்குப்பையில் போட்டு விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | கொடைக்கானலில் கால்ப் விளையாடும் முக ஸ்டாலின்! வைரல் வீடியோ!

வாயில்லா ஜீவன்களை கடத்தி இறைச்சி கடைகளில் விற்பனை செய்து வருவதாகவும் இதை கால்நடைத்துறை மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். ப்ளூ கிராஸ் மற்றும் கால்நடை துறையில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.

வருங்காலத்தில் பூனைகளே இருக்காது...

மேலும் அவர், "இரவு நேரங்களில் சட்டவிரோதமான சம்பவங்கள் பைக் திருடும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதை காவல்துறை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இரவு நேரங்களில் வெளியே செல்வதற்கே அச்சப்படும் நிலை தற்போது உருவாகியுள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து சென்னையில் விலங்குகளுக்கு பாதுகாப்பு இல்லை மனிதர்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கும் என ஆதங்கப்பட்டார். சில ஆண்டுகளில் சென்னையில் உள்ள பூனைகள் மற்றும் நாய்கள் இல்லாமல் போகும் எனவும் புத்தகங்களில் தான் விலங்குகள் குறித்து படிக்க முடியும் எனவும் அவர் பேசினார். இரவு நேரங்களில் நாய் பூனைகளைப் பிடிக்கும் நபர்கள் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார். 

முதல்நாள் ஒருநபர் ஒரு சிறுவனுடன் சேர்ந்து இந்த குற்றச் சம்பவத்தை செய்து வருகிறார். அவரை அடுத்த நாளும் பார்த்தேன். பெரியா சாக்குப்பையில் பூனைகள் நிறைய இருந்தது. நான் சாக்கை அறுத்துவிடவும் அவை சிதறி ஓடின. பூனைகளை சாப்பிடுவது என்ன மாதிரியான மனநிலை என தெரியவில்லை. கடந்தாண்டு கூட பல்லாவரத்தில் ஒரு உணவகத்தில் 15 பூனைகளை பிடித்தனர். ஒவ்வொரு பூனையும்3-4 கிலோ இருக்கிறது, இதனை ஒரு நபரால் உண்ண முடியாது. எனவே, இது பெரிய வியாபாரமாகவே உள்ளது. 

மேலும் படிக்க | ஓசூர் தனியார் குழந்தைகள் மருத்துவமனைக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News