ஐபிஎல் கிரிக்கெட் பார்க்க இனி கட்டணம்! ஜியோ சினிமா மாத சந்தா கட்டணம் முழு விவரம்

JioCinema's new plan : ஜியோ சினிமா செயலியில் இப்போது ஐபிஎல் தொடர் இலவசமாக ஒளிபரப்பப்படும் நிலையில், அதற்கான மாத சந்தா கட்டணம் விரைவில் விதிக்கப்பட உள்ளது. அது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 25, 2024, 01:45 PM IST
  • ஜியோ சினிமா புதிய சந்தா
  • இன்று அறிமுகப்படுத்தும் ஜியோ
  • 30 ரூபாய் விலை என தகவல்
ஐபிஎல் கிரிக்கெட் பார்க்க இனி கட்டணம்! ஜியோ சினிமா மாத சந்தா கட்டணம் முழு  விவரம் title=

பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கும் ஜியோ சினிமா, யூசர்களுக்கு புதிய சந்தாவை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இது குறித்து ஜியோ சினிமா நிறுவனம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், புதிய சந்தா திட்டங்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கப்படும் என்றும், அதில் வாடிக்கையாளர்கள் விளம்பரமில்லா அனுபவத்தைப் பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. Viacom18 இன் ஜியோசினிமா,  மாதத்திற்கு ரூ.30 மற்றும் ஆண்டுக்கு ரூ.300 என சந்தா நிர்ணயம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை வீட்டில் இருந்தே பெறலாம்!

ஐபிஎல் தொடர் முதலில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் ஒளிபரப்பிக் கொண்டிருந்த நிலையில், அதனை பெரும் தொகை கொடுத்து ஏலம் எடுத்தது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். இதனால் ஹாட் ஸ்டார் யூசர்கள் அனைவரும் ஜியோ சினிமாவுக்கு தாவினர். அதுவும் கட்டணம் இல்லாமல் ஜியோ சினிமா பார்க்கவும் அனுமதி கொடுத்தது. இடதனால் யூசர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. மெல்ல மெல்ல யூசர்கள் அதிகமாக வந்தவுடன் ஜியோ இப்போது சந்தா திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் மட்டுமல்லாமல் ஹாலிவுட், பாலிவுட், இந்திய சினிமாக்களையும், வெப் சீரிஸ்களையும் இதில் பார்த்து ரசிக்க முடியும். 

இதற்கு மாத சந்தா 30 ரூபாய் நிர்ணயிக்க ஜியோ சினிமா முடிவெடுத்துள்ளது. ஆண்டுக்கு 300 ரூபாய் கட்டணமும் விதிக்கபட இருப்பதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்தாவை செலுத்துபவர்கள் விளம்பரம் இல்லாமல் ஐபிஎல் மற்றும் திரைப்படங்களை பார்த்து ரசிக்க முடியும். புதிய ஜியோசினிமா திட்டத்தில் 4கே தரத்தில் வீடியோக்களை பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும் அனுமதிக்கும் என்றும் கூறப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் ஜியோ ஓடிடி சந்தா வர இருப்பதால், மற்ற ஓடிடி சந்தாகளுக்கான யூசர்கள் எண்ணிக்கை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது JioCinema இரண்டு திட்டங்களை கொண்டுள்ளது. இதன் ஆண்டு சந்தா ரூ.999 மற்றும் மாதாந்திர பேக் ரூ.99. இருப்பினும், இவற்றைப் பணம் செலுத்திய பிறகும், நீங்கள் பிரீமியம் பயனராக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் முற்றிலும் விளம்பரமில்லாத அனுபவத்தைப் பெறுவதில்லை. புதிய சந்தா கட்டணம் வெளியானவுடன் ப்ரீமியம் யூசர்களுக்கு கூடுதல் சலுகை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் படிக்க | ஐபிஎல் போட்டிகளை பார்க்க இனி கட்டணம் வசூலா...? - ஜியோசினிமாவின் புதிய திட்டம்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News